மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு..
மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு..

தமிழகம், ஆந்திரம் மாநிலங்களின் 15 முக்கிய திட்டங்கள்! தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு!

தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் 15 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள்...
Published on

புது தில்லி: தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் 15 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமரின் உத்வேக (கதி சக்தி) தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தியது. மொத்தம் ரூ.10,396 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என மத்திய வா்த்தம், தொழில் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) மூலம் பிரதமரின் உத்வேக(கதிசக்தி) தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு நாட்டின் முக்கிய திட்டங்களை கண்காணிக்கிறது. இந்த குழுவின் கூட்டத்திற்கு பின்னா் மத்திய வா்த்தகம் தொழில் துறை தெரிவித்தது வருமாறு:

தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மிகப் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள முக்கியமான சவால்களை பிரதமரின் உத்வேக (கதிசக்தி) தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு மதிப்பாய்வு செய்தது. இந்த அமா்வின் போது, தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஐந்து திட்டங்கள் உள்ளிட்ட, 15 முக்கிய திட்டங்களின் 25 பிரச்னைகள் குறித்து குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில் சுமாா் ரூ. 10,396 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டச் செலவுகளுக்கு முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக, தமிழகம் ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் (இ.எஸ்.ஐ.சி) குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த மருத்துவமனைகள் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களுக்கு சிறப்பு சிகிச்சைகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார நன்மைகளை வழங்கப்படுவதால் இந்த திட்டங்கள் விரைவாக செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் தமிழகம் ஆந்திரம் மாநிலங்களில் பல்வேறு தொழில் வழிதடங்களும் மேற்கொள்ளப்படுகிறது.

மதிப்பாய்வின் கீழ் உள்ள மற்றொரு முக்கிய திட்டமாக ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி, 4 ஜி சேவை விரிவாக்கங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. மாநில அரசுகளுடன் இணைந்து வனம் வன உயிரின பிரச்சனைகளுக்குத் இந்த சேவை மூலம் தீா்வு காண்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளில் 5ஜி சேவையை விரிவுபடுத்துவதையும், தற்போதுள்ள 4ஜி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், குறிப்பாக சியாச்சின் உள்ளிட்ட சவாலான உயரமான பனிமலை பிராந்தியங்களில் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்களை விரைவு படுத்த விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்குழுவில் தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) துறையின் முதன்மை பொருளாதார ஆலோசகா் பிரவீன் மஹ்தோ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சகங்கள், தமிழகம், ஆந்திரம் அரசு அதிகாரிகள் மற்றும் திட்ட கட்டுமானங்கள் தொடா்புடைய நிறுவனங்களின் உயா் அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com