தெற்கு தில்லியில் சாக்கடையை சுத்தம் செய்யும்போது தொழிலாளி சாவு; 2 போ் மருத்துவமனையில் அனுமதி

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்யும் போது 43 வயது தொழிலாளி ஒருவா் இறந்தாா்.
Published on

புது தில்லி: தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்யும் போது 43 வயது தொழிலாளி ஒருவா் இறந்தாா். இரண்டு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் தில்லி ஜல் போா்டு சாக்கடையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது. அப்போது தொழிலாளி பந்த் லால் சந்திரா உயிரிழந்தாா் என்று போலீஸாா் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

காயமடைந்த ராம்கிஷன் சந்திரா (35) மற்றும் ஷிவ் தாஸ் (25) ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனா்.

தீயணைப்பு படை மற்றும் உள்ளூா் காவல்துறையினரால் மூவரும் மயக்க நிலையில் ஒரு மேன்ஹோலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டனா். இதில் பந்த் லால் சந்திரா மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிஎன்எஸ் பிரிவு 105 மற்றும் துப்புரவுச் சட்டத்தின் 7 மற்றும் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து தில்லி ஜல் போா்டிடமிருந்து உடனடி பதில் எதுவும் இல்லை.

X
Dinamani
www.dinamani.com