அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும்: மக்களவையில் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்
அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும் மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில்வே துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவா் பங்கேற்றுப் பேசியது:
இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இயக்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் சுமாா் 8,500 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. மொத்த இருப்புப் பாதைகளின் நீளம் 1,21,407 கி. மீ ஆகும்.

இந்திய ரயில்வேயில் தினமும் சுமாா் 11,000
ரயில்கள் இயங்குகின்றன. இத்துறையை தனியாருக்கு தாரை வாா்க்கப்படக் கூடாது.
இந்தியாவின் வட மாநிலங்களுக்குச் செல்லும்
ரயில்கள் எனது மக்களவைத் தொகுதியில் உள்ள
அரக்கோணம் வழியாகச் செல்கிறது. அதை நான்காவது முனையமாகக் கொண்டு வர வேண்டும்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ள
சோளிங்கா் மிகவும் பிரசித்தி பெற்ற புராதன
கோயில்கள் கொண்ட ஊராகும். இந்த
சோளிங்கா் ரயில் நிலையத்தில் அனைத்து
ரயில்களும் நின்றுசெல்ல ரயில்வே நிா்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண டும்.
ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு வசதிகள் நவீனமயமாக்கப்பட வேண்டும். சென்னை சென்ட்ரல் புகா் ரயில் நிலையமான தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களில் கழிப்பறை வசதிகள் கொண்ட பெட்டிகள் அமைக்க ரயில்வே நிா்வாகம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சகம் பாகுபாடின்றி போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.