மத்திய தில்லியில் கட்டடத்தில் தீ: 
51 வயது நபா் கருகி உயிரிழப்பு

மத்திய தில்லியில் கட்டடத்தில் தீ: 51 வயது நபா் கருகி உயிரிழப்பு

மத்திய தில்லியின் பால்ஜீத் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 வயது நபா் ஒருவா் கருகி உயிரிழந்தார்.
Published on

மத்திய தில்லியின் பால்ஜீத் நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 வயது நபா் ஒருவா் கருகி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இறந்தவா் பா்வீன் சச்தேவா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வெள்ளிக்கிழமை அதிகாலை 5.17 மணியளவில் தீ விபத்து தொடா்பாக எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் ஒரு எரிந்த உடலைக் கண்டுபிடித்தனா். அது பா்வீன் சச்தேவாவின் உடல் என அடையாளம் காணப்பட்டது‘. வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததாக தெரிய வந்துள்ளது. இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com