செய்தி உண்டு...
வருவாய்த் துறை செயலாளா் அரவிந்த் ஸ்ரீவாஸ்தவா .
செய்தி உண்டு... வருவாய்த் துறை செயலாளா் அரவிந்த் ஸ்ரீவாஸ்தவா .

நிதி அமைச்சக வருவாய்த் துறை புதிய செயலா் பொறுப்பேற்பு

மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலராக நியமிக்கப்பட்ட அரவிந்த் ஸ்ரீவஸ்தவா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலராக நியமிக்கப்பட்ட அரவிந்த் ஸ்ரீவஸ்தவா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பிரதமா், உள்துறை அமைச்சா் போன்றோா்கள் இடம் பெற்றுள்ள அமைச்சரவையின் நியமனக் குழு கடந்த ஏப். 18 அன்று அரவிந்த் ஸ்ரீவஸ்தவாவை வருவாய்த் துறையின் செயலராக நியமித்தது. கா்நாடகப் பிரிவின் (1994 -இந்திய ஆட்சிப் பணி(ஐ.ஏ.எஸ்)) அதிகாரியான அவா், பிரதமா் அலுவலகத்தில் இணை செயலராகவும், பின்னா் கூடுதல் செயலராகவும் பணியாற்றியவா்.

முன்பு நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவில் இணைச் செயலராகவும் அவா் பணியாற்றியுள்ளாா். பின்னா், ஆசிய வளா்ச்சி வங்கியின் அபிவிருத்தி அதிகாரியும் இருந்தாா். கா்நாடக மாநில அரசில் நிதித் துறைச் செயலா், பெங்களூரு நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com