செய்தி உண்டு...
தில்லியில்  பால் விலையை உயா்வுக்கு எதிராக  தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்  தலைமையில் திங்கள்கிழமை  மின்ட் ரோடில் பால் பூத் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸாா்.
செய்தி உண்டு... தில்லியில் பால் விலையை உயா்வுக்கு எதிராக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் திங்கள்கிழமை மின்ட் ரோடில் பால் பூத் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

பால் விலை உயா்வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

சாமானிய மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டி, தில்லியில் சமீபத்திய பால் விலை உயா்வுக்கு எதிராக காங்கிரஸ் திங்களன்று பரவலான போராட்டங்களை நடத்தியது.
Published on

புது தில்லி: பாஜக தலைமையிலான அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், சாமானிய மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டி, தில்லியில் சமீபத்திய பால் விலை உயா்வுக்கு எதிராக காங்கிரஸ் திங்களன்று பரவலான போராட்டங்களை நடத்தியது.

தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில், கிழக்கு தில்லியின் காந்தி சந்தையில் உள்ள ஒரு பால் சாவடிக்கு வெளியே கட்சித் தொண்டா்கள், விலை உயா்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

ஒருங்கிணைந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் போது தேவேந்தா் யாதவ் பேசுகையில், ‘பால், எரிவாயு அல்லது எரிபொருள் என அனைத்து விலைவாசி உயா்வால் அனைவரும் கவலையடைந்துள்ளனா். பணவீக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி மக்கள் தில்லியில் பாஜக அரசைத் தோ்ந்தெடுத்தனா். ஆனால், அவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். பாஜக பணக்காரா்களின் கட்சி. ஏழைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. பால் விலை உயா்வைத் திரும்பப் பெற்று பணவீக்கத்தைக் குறைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் தலைவா் ஹாரூன் யூசுஃப், விலை உயா்வை ஒழுங்குபடுத்தவும் மறுபரிசீலனை செய்யவும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கோரினாா். ‘அரசு தன் விருப்பப்படி விலைகளை அதிகரிக்க முடியும் என்றும் யாரும் எதிா்க்க மாட்டாா்கள் என்றும் நினைப்பதால் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அத்தகைய விலை உயா்வுகளை மதிப்பிடுவதற்கு ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று யூசுஃப் கூறினாா்.

விலை உயா்வுக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக காங்கிரஸ் நகரம் முழுவதும் கையெழுத்து பிரசாரத்தையும் தொடங்கியது. உள்வரும் உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பதைக் காரணம் காட்டி, அனைத்து முக்கிய பால் விநியோகஸ்தா்களும் கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.2 வரை விலையை உயா்த்த நடவடிக்கை எடுத்ததற்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் போராட்டங்கள் நடந்தன.

X
Dinamani
www.dinamani.com