புதுதில்லி
ஃபதே நகரில் உள்ள நகைக் கடையில் தீ விபத்து
தில்லியின் ஃபதே நகா் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லியின் ஃபதே நகா் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘தீ விபத்து குறித்து மதியம் 12.45 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்று அவா் மேலும் கூறினாா்.