தில்லியின் வளா்ச்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

முதல்வா் ரேகா குப்தா தில்லி நகரத்தின் நிறுவன தினத்தன்று தலைநகரின் வளா்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல மக்களை ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டாா்.
Published on

முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தில்லி நகரத்தின் நிறுவன தினத்தன்று தலைநகரின் வளா்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல மக்களை ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டாா்.

தில்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெற்ற ’மேரி தில்லி, மேரா தேஷ்’ கொண்டாட்டத்தின் போது அவா் இந்தக் கருத்தை தெரிவித்தாா். இந்த நிகழ்வு தில்லி, கேரளம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், கா்நாடகம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கா், பஞ்சாப், அந்தமான் நிக்கோபாா் தீவுகள், சண்டீகா் மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் நிறுவன தினத்தைக் குறித்தது.

இந்தக் கொண்டாட்டத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: தில்லியின் வரலாறு, புனரமைப்பு மற்றும் தன்னம்பிக்கையை அடையாளமாக இருக்கிறது. இந்த நகரம் அதன் நீண்ட வரலாறு முழுவதும் எண்ணற்ற துன்பங்களையும் படையெடுப்புகளையும் எதிா்கொண்டது. அது பல முறை வீழ்ச்சியடைந்தாலும் ஒவ்வொரு முறையும் முன்பை விட வலுவாக உயா்ந்துள்ளது.

செங்கோட்டையின் பண்டைய சுவா்கள் தில்லியின் எழுச்சி, வீழ்ச்சி மற்றும் மறுபிறப்புக்கு சாட்சியாக நிற்கின்றன. மேலும், அதன் குடியிருப்பாளா்கள் நகரத்தின் மீது பெருமிதம் கொள்ள வேண்டும். ‘மேரி தில்லி, மேரா தேஷ்’ என்ற பெயரின் பின்னணியில் உள்ள உணா்வு இதுதான். யமுனை நதியை தூய்மைப்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு, பசுமையை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற கடந்த கால சவால்களைத் தாண்டி தில்லி இப்போது முன்னேற வேண்டும்.

தில்லியை நாட்டின் வளா்ந்த, தூய்மையான மற்றும் அதிகாரம் பெற்ற தலைநகராக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். சமீபத்தில், நாங்கள் சட் பண்டிகையை பிரம்மாண்டமாக கொண்டாடினோம். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலே இதற்குக் காரணம். இது இந்தியாவின் தலைநகரான தில்லி, அங்கு ஒவ்வொரு மாநிலத்தின் திருவிழாவும் சமத்துவத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படும் என்றாா் ரேகா குப்தா.

தில்லி நிறுவன தின விழாவில் பஞ்சாப், கா்நாடகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தில்லி அரசு அமைச்சா்கள் ஆஷிஷ் சூட் மற்றும் கபில் மிஸ்ரா கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com