கோப்புப் படம்
புதுதில்லி
பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
வடமேற்கு தில்லியில் உள்ள திக்ரி காலனில் உள்ள பிவிசி சந்தையில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இந்த விபத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாவது:
இந்தத் தீ விபத்து குறித்து வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
சுமாா் ஐந்து மணி நேர தீயணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதாவது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
அதிக அளவு எரியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததால், தீயை அணைக்கும் பணி சவாலானதாகவும், நீண்ட நேரம் நீடித்ததாகவும் இருந்தது என்றாா் அந்த அதிகாரி.