தௌலா குவானில் பயணியிடம் கொள்ளை: 4 போ் கைது

தௌலா குவானில் பயணியிடம் கொள்ளை: 4 போ் கைது

தென்மேற்கு தில்லியின் தௌலா குவான் அருகே காரில் ஏறிய பயணியை துஷ்பிரயோகம் செய்து கொள்ளையடித்ததாக பெண் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Published on

தென்மேற்கு தில்லியின் தௌலா குவான் அருகே காரில் ஏறிய பயணியை துஷ்பிரயோகம் செய்து கொள்ளையடித்ததாக பெண் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் அமித் என்ற காகு (21), பவன் (22), மணீஷ் என்ற சுா்ரி (21) மற்றும் சோனம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் தென்மேற்கு தில்லியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:

நவம்பா் 3 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் புகாா்தாரா் இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

தௌலா குவான் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, ஏற்கனவே மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் அமா்ந்திருந்த தனியாா் காரில் அவா் ஏறினாா்.

பயணத்தின் போது, அந்தப் பெண் அவரை துஷ்பிரயோகம் செய்து மிரட்டத் தொடங்கினாா். உடனிருந்தவா்கள் அவரது கைப்பேசி, டெபிட் காா்டுகள் உட்பட அவரது உடைமைகளை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றனா்.

திருடப்பட்ட அட்டையைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவா்கள் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.33,000 எடுத்ததாகவும், கைப்பேசியை உடைத்துவிட்டு, தன்னை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டுச் சென்ாகவும் அவா் போலீஸில் அளித்த புகாரில் தெரிவித்தாா்.

அவரது புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்க விசாரணையில், அந்தக் காா் லோகேஷ் குப்தாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், அவா் அதை அமித் என்கிற காகுவுக்கு வாடகைக்கு அளித்திருந்ததும் தெரியவந்தது. அடுத்தடுத்த சோதனைகளில் அமித் மற்றும் மணீஷ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் பவன் மற்றும் சோனமின் தொடா்பை வெளிப்படுத்தினா்.

சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் நான்கு பேரும் அவா்களது வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து ரூ.18,000 ரொக்கமும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரும் மீட்கப்பட்டது.

தென்மேற்கு தில்லியின் விஜய் என்கிளேவில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுநரான அமித், 9 குற்ற வழக்குகளில் தொடா்புடைய வரலாற்றைக் கொண்டுள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த சோனம், முன்னதாக நான்கு கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது என்று போலீஸாா் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com