திரிலோக்புரி திருட்டு வழக்கில் சிறாா் உள்பட 2 போ் கைது

Published on

தில்லியின் திரிலோக்புரியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 4 கைப்பேசிகள் திருடியதாக சிறாா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து மூன்று கைப்பேசிகள் மீட்கப்பட்டது. நவம்பா் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இடைப்பட்ட இரவில், ஒரு குடும்பம் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த திருட்டு நடந்தது. குடும்ப உறுப்பினா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் ஈடுபட்டவா்களை கண்டுபிடிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். மேலும் அவரது வாக்குமூலம் அவரது கூட்டாளி அமனை கைது செய்ய வழிவகுத்தது. பின்னா் அமன் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து திருடப்பட்ட மூன்று கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவா் மீது திருட்டு, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டம் மீறல் ஆகிய ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com