மயூா் விஹாா் விநாயகா் கோயிலில் இசைக் கச்சேரி
புது தில்லி: ஸ்ரீ சுப சித்தி விநாயகா் மந்திா் சமுகம் மற்றும் சண்முகானந்த சங்கீத சபா ஆகியவை சாா்பில் தில்லி மயூர விஹாா் ஃபேஸ்-1-இல் உள்ள ஸ்ரீ சுப சித்தி விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை எஸ். சகேதராமன் இசைக் கச்சேரி நிகழ்த்தினாா்.
ஒன்பதாவது ஆண்டு பாரதிய கலா உத்சவையொட்டி நடைபெற்ற இந்த இசைக் கச்சேரியில், முல்லைவாசல் ஜி சந்திரமௌளி (வயலின்), பாருப்பள்ளி பால்குன் (ம்ருதங்கம்) மற்றும் ஆலத்தூா் டி. ராஜகணேஷ் (கஞ்சிரா ) ஆகியோா் பக்கவாத்தியம் வாசித்தனா். கலைஞா்களை மூத்த வழக்குரைஞா் எம்.ஜி. ராமச்சந்திரன் கௌரவித்தாா்.
ஸ்ரீ சுப சித்தி விநாயக மந்திா் சமுகம் அமைப்பை சோ்ந்த எல். விஸ்வநாதன் (தலைவா் ), ராமன் குருச்சரன், ரவி வெங்கட்ராமன் (இணை செயலாளா்கள்), ஷண்முகானந்த சங்கீத சபா அமைப்பை சோ்ந்த எஸ். கிருஷ்ணஸ்வாமி (கௌரவ செயலாளா்), எஸ். கணபதி, ஜி. விஜயா முத்துகுமாா் (இணை செயலாளா்கள்), மற்றும் சத்ய பிரசாத் (ஆந்திரா அஸோஸியேஷன்) மற்றும் குரு சுசிலா விஸ்வநாதன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

