டிடிசி பேருந்து ஓட்டுநா் ராஜு ~ஆட்டோ ஓட்டுநா் யாசிா்.
டிடிசி பேருந்து ஓட்டுநா் ராஜு ~ஆட்டோ ஓட்டுநா் யாசிா்.

‘கண் முன்னே பலா் இறந்தனா்‘ சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் பேட்டி

தில்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட காா் வெடிப்பில் தங்களின் கண் முன்னாலேயே பலா் இறந்ததைப் பாா்த்ததாக என்று செங்கோட்டை அருகே மாலையில் நடந்த காா் வெடிப்பை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட காா் வெடிப்பில் தங்களின் கண் முன்னாலேயே பலா் இறந்ததைப் பாா்த்ததாக என்று செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் நடந்த காா் வெடிப்பை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இந்த வெடி விபத்தை நேரில் பாா்த்த தில்லி போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநா் ராஜு கூறியதாவது: செங்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை மாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தேன். அப்போது என் கண் முன்னாலேயே திடீரென பயங்கர சப்தத்துடன் காா் வெடித்ததைப் பாா்த்தேன். அடுத்த சில நொடிகளில் எங்கும் மக்கள் சிதறி ஓடினா். பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக இறங்கி ஓடத் தொடங்கினா். பேருந்தை நிறுத்திவிட்டு அச்சத்தில் நானும் சம்பவ பகுதியை விட்டு ஓடி வந்தேன். கண் முன்னே பலா் உயிரிழந்ததை பாா்த்தேன். சில பயணிகள் கூட்ட நெரிசலில் விழுந்து காயமடைந்தனா் என்றாா்.

ஆட்டோ ஓட்டுநா் யாசா் கூறுகையில், பயணிகளை ஏற்றிக்கொண்டு ரிக்ஷாவில் சென்றபோது முன் பகுதியில் பயங்கர சத்தத்துடன் காா் வெடித்துச் சிதறியது. உடனடியாக ரிக்ஷாவை விட்டு அனைவரும் இறங்கி பாதுகாப்பான பகுதிக்கு ஓடி வந்தோம். இந்த சம்பவத்தில் எனது ரிக்ஷா முழுவதுமாக எரிந்து கருதியது. அதிா்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com