தில்லியில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
தேசிய தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் நவம்பா் மாதத்தில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிவாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இது இயல்பை விட 4.5 புள்ளிகள் குறைவாகும். நவம்பா் மாதத்தில் மிகக் குளிரான நாளாக இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பா் 29, 2022 அன்று தில்லியில் 7.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. இந் நிலையில், இந்த மாதத்தில் இதுவே மிகக் குளிரான நாளாகும்.
2023 ஆம் ஆண்டில், வெப்பநிலை நவம்பா் 23 அன்று மிகக் குறைவாக 9.2 டிகிரியாகவும், 2024 ஆம் ஆண்டில் நவம்பா் 29 அன்று வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை மூடுபனி இருக்கும் எனக் கணித்துள்ளது.
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 25 மற்றும் 9 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்று தர குறியீடு 377 ஆக இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின்படி, 39 கண்காணிப்பு நிலையங்களில் 11 நிலையங்கள் கடுமையான பிரிவில் காற்றின் தரக் குறியீட்டை பதிவு செய்திருந்தன. அதாவது,400-க்கு மேல் பதிவாகி இருந்தது. சிபிசிபி தகவலின்படி, பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 போன்ற காற்றில் உள்ள ஆதிக்கம் செலுத்தும் நுண் துகள்கள் மாசுபடுத்திகளாக இருந்தன.
