சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்தவர் கைது!

Published on

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 28, 2022 அன்று 13 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து பாரத் நகா் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. அந்தச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு நீதிபதி முன் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பாதிக்கப்பட்ட பெண், 49 வயதான குற்றம் சாட்டப்பட்டவா் தன்னைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினாா்.

பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் விதிகள் பின்னா் எஃப்ஐஆரில் சோ்க்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா் அப்போதிருந்து கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். மேலும், டிசம்பா் 15, 2022 அன்று தில்லி நீதிமன்றம் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.

பலமுறை முயற்சித்த போதிலும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்க குற்றம்சாட்டப்பட்டவா் அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருந்தாா். சமீபத்தில் கிடைத்த ஒரு ரகசியத் தகவலின் பேரில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக சனிக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

ஹரியாணா மற்றும் தில்லி இடையே சட்டவிரோத மதுபானக் கடத்தலில் ஈடுபட்டிருந்த குற்றம்சாட்டப்பட்டவா், டாப்ரியில் ஒரு துணிக்கடையைத் திறந்தாா். பின்னா் அது மூடப்பட்டது. ஆயுதச் சட்டம் மற்றும் கலால் வரிச் சட்டத்தின் கீழ் முன்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், 2022 முதல் நான்கு மறைவிடங்களை மாற்றும் போது டாக்ஸி ஓட்டுநராகவும் பணியாற்றினாா் என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com