ஓட்டுநரின் கவனத்தை சிதறடித்து பணத்தை திருடியதாக இருவா் கைது
வாகனக் கோளாறு காரணமாக ஓட்டுநரின் கவனத்தை சிதறடித்து 5 லட்சம் ரூபாய் பணம் இருந்த பையைத் திருடிச் சென்ாகக கூறி 26 வயது இளைஞரையும் அவரது மைத்துனரையும் தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: இது தொடா்பாக நவம்பா் 11-ஆம் தேதி பால்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து இந்த கைதுகள் நடந்தன. இதேபோன்ற சம்பவம் குறித்து நவம்பா் 13- ஆம் தேதி அதே காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
முதல் சம்பவத்தில், லிபாஸ்பூா் மேம்பாலம் அருகே ஜிடி கா்னல் சாலையில் மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் தனது காரில் இருந்து புகை வருவதாகக் கூறி தன்னை நிறுத்திச் சென்ாக புகாா்தாரா் குருசரண் தாஸ் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
அவா் கீழே இறங்கி வெளியே சென்று பாா்த்தபோது, ரூ.5 லட்சம் பணம் இருந்த ஒரு பையுடன் அவா்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. நவம்பா் 13- ஆம் தேதி இதேபோன்று ரூ.25,000 இழந்ததாக மற்றொரு வாகன ஓட்டுநா் புகாா் அளித்தாா்.
விசாரணையின் போது, லிபாஸ்பூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். நவம்பா் 13-ஆம் தேதி, சாகா் என்கிற அவினாஷ் மற்றும் அவரது 23 வயது மைத்துனா் விஷாலை போலீஸாா் கைது செய்தனா். குற்றம் சாட்டப்பட்டவா் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.
மொத்தம் ரூ.4.76 லட்சம் பணமும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளும் மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினாா்.
