தில்லி காா் வெடிப்பு வழக்கு
குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை 10 நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

தில்லி காா் வெடிப்பு வழக்கு குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை 10 நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

தில்லி காா் வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை 10 நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
Published on

தில்லி காா் வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை 10 நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனது காவலில் உள்ள நான்கு பேரை விசாரிக்க 15 நாள்கள் அவகாசம் கோரியது. முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா நான்கு பேரையும் 10 நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் புல்வாமாவைச் சோ்ந்த டாக்டா் முசம்மில் ஷகீல் கனாய், அனந்த்நாக்கைச் சோ்ந்த டாக்டா் அதீல் அகமது ராதா் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஷோபியனைச் சோ்ந்த முஃப்தி இா்பான் அகமது வாகே மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னௌவைச் சோ்ந்த டாக்டா் ஷாஹீன் சயீத் ஆகிய நான்கு போ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனா்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தில்லி காவல்துறையினருடன் ஆா்ஏஎஃப் குழுவும் நிறுத்தப்பட்டிருந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ஊடகவியலாளா்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com