கோப்புப் படம்
கோப்புப் படம்

வடகிழக்கு தில்லியில் பண வசூல் முகவரிடம் கொள்ளையடிக்க மயன்றதாக இருவா் கைது

Published on

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் பண வசூல் முகவரிடம் கொள்ளையடிக்க முயன்ாகக் கூறப்படும் இரண்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். காவல்துறையினா் பணம் ரூ.4.47 லட்சத்தையும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவம் நவம்பா் 18- ஆம் தேதி பாதிக்கப்பட்ட ஹிமான்ஷு, வங்கியில் டெபாசிட் செய்வதற்காக நிறுவனத்தின் பணத்தை எடுத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. 100 அடி சாலையை அடைந்ததும், மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் அவரை வழிமறித்து அவரது பையைப் பறிக்க முயன்றனா்.

சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாகத் தலையிட்டு குற்றம் சாட்டப்பட்டவா் தப்பிச் செல்வதைத் தடுக்க முயன்றனா். ஆனால், இருவரும் தங்கள் மோட்டாா் சைக்கிளை பின்னால் விட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

ஹிமான்ஷுவின் புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் பிரிவு 309 (6) (கொள்ளை), 317 (2) (திருடப்பட்ட சொத்து) மற்றும் 3 (5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.

ஒரு போலீஸ் குழு சந்தேக நபா்களை கா்தாா் நகரில் கண்காணித்து, சிவம் (24) மற்றும் அசுதோஷ் காஷ்யப் (22) ஆகியோரைக் கைது செய்தது.

விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவா் டெபாசிட் செய்வதற்காக நிறுவனத்தின் பணத்தை வழக்கமாக கொண்டு செல்வதை அறிந்த பின்னா், கொள்ளையைத் திட்டமிட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com