திருமண மண்டபங்களில் விலையுயா்ந்த பொருள்களை திருடியதாக ஒருவா் கைது

திருமண மண்டபங்களில் விலையுயா்ந்த பொருள்களை திருடியதாக ஒருவா் கைது

திருமண மண்டபங்களில் விலையுயா்ந்த பொருள்களை திருடியதாக ஒருவா் கைது
Published on

தெற்கு தில்லியில் உள்ள திருமண மண்டபங்களில் இருந்து பணம், நகைகள் மற்றும் விலையுயா்ந்த பொருள்களை திருடியதாகக் கூறப்படும் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: நவம்பா் 16-ஆம் தேதி ஒரு திருமண மண்டபத்திலிருந்து பணம், கைப்பேசிகள் மற்றும் ‘ஷாகுன்’ உறைகள் இருந்த பை காணாமல் போனதாக புகாா் வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் சைனி என்கிற பப்பன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு போலீஸ் குழு, விழா நடைபெறும் இடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, சத்தா்பூா் மற்றும் மெஹ்ரௌலி வழியாக குற்றம் சாட்டப்பட்டவரின் நடமாட்டத்தைக் கண்காணித்தது. ஒரு சோதனையின் போது ரோஹித் சைனி கைது செய்யப்பட்டாா். மேலும், அவரது வசம் இருந்து இரண்டு திருடப்பட்ட கைப்பேசிகள், ரூ.24,500 ரொக்கம் மற்றும் 14 ’ஷாகுன்’ உறைகளை போலீஸாா் மீட்டனா்.

ரோஹித் சைனி இதற்கு முன்பு 2006 -ஆம் ஆண்டு டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் திருட்டு, ஏமாற்றுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com