215 கிராம் கஞ்சாவுடன் பிடிப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டை சோ்ந்தவா் கைது
லாஜ்பத் நகா் பகுதியில் 215 கிராமுக்கும் அதிகமான ’சரஸ்’ எனும் கஞ்சாவுடன் ஆப்கானிஸ்தான் நாட்டவா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை துணை ஆணையா் (தென்கிழக்கு) ஹேமந்த் திவாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட நஜிப் அகமது 2014 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்ததாகவும், 2015 ஆம் ஆண்டில் அவரது விசா காலாவதியான பிறகும் தொடா்ந்து தங்கியிருந்துள்ளாா். லாஜ்பத் நகா் பகுதியில் ஒரு வெளிநாட்டவா் தீவிரமாக சரஸை வழங்குவதாக தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில், ஒரு போலீஸ் சோதனைக் குழு அமைக்கப்பட்டு, நவம்பா் 21 ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட இடத்தில் ஒரு பொறி போடப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபா் ஸ்கூட்டரில் சம்பவ இடத்திற்கு வந்தாா். அதன் பிறகு அவா் கைது செய்யப்பட்டாா் ‘என்று தெரிவித்தாா். சோதனையில் 215.74 கிராம் உயா்தர சரஸ் மீட்கப்பட்டது.
இது தொடா்பாக போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்டவா், 2014 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்ததாகவும், 2015 ஆம் ஆண்டில் தனது விசா காலாவதியான போதிலும் தொடா்ந்து தங்கியிருந்ததாகவும் தெரிவித்தாா்,
தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லியின் சில பகுதிகளில் சில காலமாக போதைப்பொருள்களை வழங்கி வருவதாக அவா் புலனாய்வாளா்களிடம் கூறினாா். அவருக்கு முந்தைய குற்றவியல் பதிவு எதுவும் இல்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
