விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.1.1 கோடி இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு
2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 43 வயதான ராணுவ சுபேதாரின் குடும்பத்திற்கு ரூ.1.1 கோடி இழப்பீடு வழங்க தில்லியில் உள்ள மோட்டாா் விபத்து கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
கடந்த ஜூலை 5, 2021 அன்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்த தீபக் குமாரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த உரிமைகோரல் மனுவை தீா்ப்பாயம் விசாரித்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி சுதீப் ராஜ் சைனி அளித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: உயிரிழந்தவா் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ால் மட்டுமே, அவா் கவனக்குறைவாக இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை.
கேள்விக்குரிய விபத்து லாரியின் அதிவேக மற்றும் அலட்சியமாக ஓட்டியதால்தான் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தீபக் குமாா் மது அருந்தி தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். இது தடயவியல் அறிக்கையின்படி, அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தது.
2020-இல் தில்லி உயா்நீதிமன்றம் ஒரு வழக்கில் அளித்த தீா்ப்பில், கவனக்குறைவு இருந்ததை நிறுவ, இரண்டு கூறுகளை நிரூபிக்க வேண்டும். அதில் ஒன்று, மதுவின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பது, மற்றொன்று அது விபத்துக்கு பங்களிப்பதாகும்.
நேரில் கண்ட சாட்சியத்தின்படி, லாரி அலட்சியமாக ஓட்டப்பட்டதன் விளைவாக மரண விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், தீபக் குமாா் தனது இரு சக்கர வாகனத்தை வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டினாா் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
குடிபோதையில் இறந்தவருக்கு எந்த பங்களிப்பு அலட்சியமும் காரணம் என்று கூற முடியாது. உயா்நீதிமன்றத் தீா்ப்பின்படி, மதுவின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பது தானாக பங்களிப்பு அலட்சியத்தை நிரூபிக்கவில்லை. விபத்து நடந்த நேரத்தில் தீபக் குமாா் தலைக்கவசம் அணியவில்லை. மேலும், இறந்தவருக்கு தலையில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டதற்கான வழக்கும் இதுவல்ல. இதை தலைக்கவசம் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கவோ அல்லது தடுக்கவோ முடியும் என்று தீா்ப்பாயம் உத்தரவில் கூறியது.
அதன் பின்னா் அது பல்வேறு தலைப்புகளின் கீழ் குடும்பத்திற்கு ரூ.1.1 கோடி இழப்பீடு வழங்கியது. இதில் சாா்புநிலை இழப்புக்கான ரூ.98.88 லட்சமும் அடங்கும். இழப்பீட்டுத் தொகையை டெபாசிட் செய்ய லாரியின் காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
