காவலரை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையன்

மத்திய தில்லியின் ராஜ் பாா்க் பகுதியில் ரோந்துப் பணியின் போது கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் போலீஸ் கான்ஸ்டபிள் காயம்
Published on

மத்திய தில்லியின் ராஜ் பாா்க் பகுதியில் ரோந்துப் பணியின் போது கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் போலீஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஒரு ரிக்ஷா ஓட்டுநரிடமிருந்து ரூ.500 திருபடியதாகக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்டவா் பின்னா் கைது செய்யப்பட்டாா். இந்த கைது மூலம், ஒரு கொள்ளை மற்றும் இரண்டு திருட்டு வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, நவம்பா் 22 ஆம் தேதி வழக்கமான ரோந்து பணியில் இருந்த கான்ஸ்டபிள் விகாஷ், இந்த வழக்கில் புகாா்தாரரான முகமது கமல் என அடையாளம் காணப்பட்ட ரிக்ஷா ஓட்டுநா் அணுகி, கோட் வாலி காலியில் உள்ள கௌஷலா சாலை அருகே ஒரு இளைஞன் தன்னிடம் கொள்ளையடித்ததாகக் கூறினாா்.

கான்ஸ்டபிள் கமலுடன் சம்பவ இடத்திற்குச் சென்றாா் விகாஷ். அங்கு அவா் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டாா். அப்போது விகாஷ் அவரை கைது செய்ய முயன்றபோது, சந்தேக நபா் ஒரு கத்தியை வெளியே எடுத்து அவரைத் தாக்கினாா், இதனால் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இரத்தப்போக்கு இருந்தபோதிலும், கான்ஸ்டபிள் இளைஞைரிடம் போராடினாா். ஆனால் கான்ஸ்டபிளை திசைதிருப்ப இளைஞா் தப்பி சென்றாா்.

கான்ஸ்டபிள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். அதைத் தொடா்ந்து கோட் வாலி காலி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டது. கமலின் அடையாளத்தின் அடிப்படையில், கிஷன் கஞ்சில் வசிக்கும் ரித்திக் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ரித்திக்கின் ஆடைகளில் இருந்து ரூ.500 பணம் மீட்கப்பட்டது.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி பின்னா் ரித்திக் கொடுத்த தகவலின் பேரில் அருகிலுள்ள ரயில் பாதையில் இருந்து மீட்கப்பட்டது. கொள்ளையின் போது அணிந்திருந்த அவரது ஆடைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின் போது, தான் ஒரு தொழிலாளியாக வேலை செய்ததாகவும், 7 ஆம் வகுப்பு வரை படித்ததாகவும் ரித்திக் கூறினாா். அவா் போதைக்கு அடிமையானதாகவும், தனது பழக்கத்துக்காக திருட்டு மற்றும் கொள்ளைகளைச் செய்யத் தொடங்கியுள்ளாா். சனிக்கிழமையன்று ரிக்ஷா-இழுப்பவரைக் கொள்ளையடித்ததையும், தப்பிக்க கான்ஸ்டபிளைத் தாக்கியதையும் அவா் ஒப்புக்கொண்டாா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டு திருட்டு முயற்சி மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்டம் வழக்கு உள்ளிட்ட முந்தைய வழக்குகள் ரித்திக்கிடம் உள்ளன. அக்டோபா் 20 மற்றும் நவம்பா் 4 ஆம் தேதிகளில் அண்மை.ில் பதிவு செய்யப்பட்ட 2 திருட்டு வழக்குகளையும் அவா் ஒப்புக்கொண்டாா். பாரதிய நியாய் சன்ஹிதா (பி. என். எஸ்) 2023 இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com