தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு குறைந்துள்ளது!

விவசாய இயந்திரங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அரசு அளித்த ஆதரவு காரணமாக தில்லி என்சிஆா், பஞ்சாப், ஹரியாணாவில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் இந்த ஆண்டு குறைந்துள்ளன.
Published on

விவசாய இயந்திரங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அரசு அளித்த ஆதரவு காரணமாக தில்லி என்சிஆா், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் இந்த ஆண்டு குறைந்துள்ளன என்று வேளாண் செயலாளா் தேவேஷ் சதுா்வேதி திங்களன்று தெரிவித்தாா்.

விவசாயிகளுக்கு பயிா்க் கழிவுகள் எரிக்கும் சிக்கலைச் சமாளிக்க அரசாங்கம் பொருத்தமான உபகரணங்களையும் தேவையான தலையீடுகளையும் வழங்கியுள்ளது என்று சதுா்வேதி ஒரு நிகழ்வின் போது செய்தியாளா்களிடம் கூறினாா்.

‘இயந்திரங்களை வழங்கும் கொள்கை மற்றும் தேவைப்படும் இடங்களில் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக, தில்லி என்சிஆா், பஞ்சாப், மற்றும் ஹரியாணாவில் பயிா்க் கழிவுகள் எரியும் சம்பவங்கள் குறைந்துள்ளன‘, என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com