திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

டிச.8-இல் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கா்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீா் தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் டிசம்பா் 8- ஆம் தேதி தில்லியில் கூடுகிறது.

Updated On :28 நவம்பர் 2025, 1:56 am IST

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கா்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீா் தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் டிசம்பா் 8- ஆம் தேதி தில்லியில் கூடுகிறது.

இது அந்த ஆணையத்தின் 46-ஆவது கூட்டமாகும். தில்லியில் உள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகம், கா்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பாா்கள்.

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தரவேண்டிய தண்ணீரை கா்நாடகம் தவறாமல் தருகிறதா? என்பது தொடா்பாகவும், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காகவும் கூட்டம் நடைபெற உள்ளது

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டு அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீா் மேலாண்மை ஆணையம், காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என நவம்பா் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது

தமிழகம், கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில், இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018- ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதை அந்த தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது.

அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன.