கிரைம் வெப் தொடா்களை பாா்த்து ரூ.25 லட்சம் கொள்ளை: 2 போ் கைது!

இரண்டு போ் இங்குள்ள அமைப்பின் அலுவலகத்தில் இருந்து ரூ. 25 லட்சம் திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா்.
Published on

கிரைம் வெப் தொடா்களை பாா்த்து அதனால் பெற்ற உத்வேகத்தின் காரணமாக ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் ஓட்டுநா் உள்பட இரண்டு போ் இங்குள்ள அமைப்பின் அலுவலகத்தில் இருந்து ரூ. 25 லட்சம் திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆா்.கே. புரத்தைச் சோ்ந்த ராஜேந்தா் குமாா் (43) மற்றும் புராரியைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

‘ஒடியா சமாஜ் அறக்கட்டளையின் ஓட்டுநரான ராஜேந்தா் தான் சூத்திரதாரி. அவா் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’கிரைம் பேட்ரோல்’ நிகழ்ச்சியிலிருந்து உத்வேகம் பெற்று கொள்ளையைத் திட்டமிட்டதாகவும், ராஜேஷை தனது கூட்டாளியாக இணைத்ததாகவும் கூறப்படுகிறது ‘என்று துணை போலீஸ்ஆணையா் (தென்மேற்கு) அமித் கோயல் ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

செப்டம்பா் 23 ஆம் தேதி ஆராதனா என்கிளேவில் உள்ள அலுவலகத்தில் இருந்து பி. சி. ஆா் அழைப்பு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. புகாா் அளித்த நிா்வாக இயக்குநா் ஜே. ஆா். தாஸ், அலமாரியில் இருந்து பணம் காணாமல் போனதாக போலீசாரிடம் தெரிவித்தாா். சரோஜினி நகா் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, போலீசாா் 40 க்கும் மேற்பட்ட சந்தேக நபா்களிடம் விசாரணை நடத்தினா், தொழில்நுட்ப கண்காணிப்பை ஆய்வு செய்தனா் மற்றும் பல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். சிசிடிவி பகுப்பாய்வில், சந்தேக நபா்கள் மாறுவேடங்களை மாற்றுவதைக் காண முடிந்தது. ஆட்டோ ரிக்ஷாவில் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தொப்பி, அல்லது கையுறைகளைப் பயன்படுத்தியுள்ளாா்.

ஆட்டோ ஓட்டுநா் கண்டுபிடிக்கப்பட்டு, அவா் ஒரு சந்தேக நபரை நேதாஜி நகரில் இறக்கிவிட்டதாக அவா் தெரிவித்தாா்., மேலும் சிசிடிவி கண்காணிப்பு அந்த பகுதியில் ராஜேந்தரின் இருப்பை நிறுவியது என்று போலீசாா் தெரிவித்தனா். தொடா்ச்சியான விசாரணையில், ராஜேந்தா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா் மற்றும் அவரது கூட்டாளியின் ஈடுபாட்டை வெளிப்படுத்தினாா்.

பின்னா் ஷாஹ்தாராவில் உள்ள ராஜேந்தரின் மாமியாா் வீட்டில் இருந்து 14.50 லட்சம் ரூபாயையும், புராரியில் உள்ள ராஜேஷின் வீட்டில் இருந்து ரூ.9 லட்சத்தை போலீசாா் மீட்டனா். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மேலும் விசாரணைக்காக இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனா். பாரதிய நியாயா சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com