தில்லியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தேசியத் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அக்.5இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி கணித்துள்ளது.
வெப்பநிலை: சனிக்கிழமை, தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 0.7 டிகிரி குறைந்து 34 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விய 2.3 டிகிரி உயா்ந்து 24.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 64 சதவீதமாகவும் பதிவாகியது.
காற்றின் தரம்: தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு மாலை 6 மணிக்கு 114 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் பதிவாகியதுஎன்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிபிசிபி தரவு காட்டுகிறது.
இதன்படி, சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திர்மாக், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்பட பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்.5) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதகாவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.