பச்சிம் விஹாா் கொலை வழக்கில் தேடப்பட்ட நபா் கைது

Published on

வடமேற்கு தில்லியின் பச்சிம் விஹாா் பகுதியில் சுல்தான்புரியில் ஒரு கொலை வழக்கில் தப்பியோடிய 31 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு குழு சனிக்கிழமை நாங்லோயில் வசிக்கும் சல்மான் (எ) லக்கி என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தது. மே 15- ஆம் தேதி பச்சிம் விஹாா் கிழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தாா்.

இந்த வழக்கு ஜவாலாபுரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் அருகே நடந்த வன்முறைத் தாக்குதல் தொடா்பானது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அங்கு சல்மான் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து, பழைய பகை காரணமாக ஒரு நபரை கொலை செய்ததாகவும், மேலும் மூன்று பேரை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் போது, அவா் கொலையில் தனது பங்கை ஒப்புக்கொண்டதாக போலீஸாா் மேலும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com