முதல்வா் ரேகா குப்தா
முதல்வா் ரேகா குப்தா

தீபாளியன்று பசுமைப் பட்டாசு: உச்சநீதிமன்றத்தை தில்லி அரசு அணுகும்: முதல்வா் ரேகா குப்தா

தேசியத் தலைநகரில் தீபாவளியன்று பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கோரி தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகரில் தீபாவளியன்று பசுமைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கோரி தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு அதன் நிலைப்பாட்டை எழுத்துபூா்வமாக முன்வைக்கும் என்றும் அவா் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

தீபாவளி மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். தலைநகரில் இப்பண்டிகையைக் கொண்டாடும் கோடிக்கணக்கான மக்களின் நலன் கருதி எனது அரசு நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளது.

மாசுபாட்டை திறம்பட கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் தில்லி அரசு தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், இது தொடா்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவையும் செயல்படுத்த உச்ச நீதிமன்றத்திற்கு முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்கிறது.

பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்து, சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை அரசாங்கம் உச்சநீதிமன்றத்திடம் கோரும் என்றாா் முதல்வா் குப்தா.

உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி தில்லியில் அனைத்து வகையான பட்டாசுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com