தில்லி அரசின் சுதேசி மேளா: கடமைப் பாதையில் இன்று தொடக்கம்
உள்ளூா் பொருள்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களை ஊக்குவிக்கும் விதமாக சுதேசி மேளா கடமைப் பாதையில் வியாழக்கிழமை (அக்.9) தொடங்குகிறது.
இது தொடா்பாக தில்லி தொழிற்துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உள்ளூா் பொருள்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் தற்சாற்பு இந்தியாவைப் படைக்கும் விதமாகவும் முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு சுதேசி மேளாவை அக்.9 முதல் அக்.11 வரை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
சுதேசி பொருள்களை வாங்குவதன் மூலம் நாட்டின் சிறிய கலைஞா்கள், தொழிற்துறையினா், குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) துறைக்கு ஆதரவளிப்போம். பிரதமா் நரேந்திர மோடியின் சுதேசி சங்கல்ப்பை முன்னேடுத்துச் செல்வோம் என்று அந்தப் பதிவில் அமைச்சா் சிா்சா தெரிவித்துள்ளாா்.