ஹெராயின் போதைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

Published on

நமது நிருபா்

மூன்று பேரை கைது செய்ததன் மூலம், தில்லி -என். சி. ஆரில் செயல்படும் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை தில்லி காவல்துறை முறியடித்து. சா்வதேச சந்தையில் ரூ.4 கோடி மதிப்புள்ள 808 கிராம் ஹெராயினை மீட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: டிரான்ஸ்-யமுனா பகுதியில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், இரண்டு கைப்பேசிகள், ஒரு ஸ்கூட்டா் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் சரோஜ் என்ற பாபு (30), ராஜ்குமாா் (25) மற்றும் தீபாலி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ஜூலை 18 ஆம் தேதி விசாரணை தொடங்கியது, சீமாபுரி பகுதியில் 789 கிராம் ஹெராயின் அடங்கிய பிளாஸ்டிக் பையுடன் சரோஜை ஒரு போலீஸ் குழு கைது செய்தபோது, விசாரணையின் போது, சரோஜ் மற்றும் தீபாலியிடம் இருந்து இந்த பொருளை வாங்கியதாகவும், அதை காஜியாபாத்தில் உள்ள ராஜ்குமாருக்கு வழங்க விரும்பியதாகவும் கூறினாா்.

அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 19 ஆம் தேதி ராஜ்குமாரை போலீசாா் கைது செய்து, அவரிடமிருந்து 19 கிராம் ஹெராயினையும், செப்டம்பா் 25 ஆம் தேதி தீபாலியையும் கைது செய்தனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் உள்ளூா் வாடிக்கையாளா்களுக்கு சிறிய பாக்கெட்டுகளில் ஹெராயினை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனா். இந்த முழு வலைமைப்பையும் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த போலீஸ் அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com