ரூ.5000 கடனை திருப்பி செலுத்தாதவரை கத்தியால் குத்தி கொன்ற நபா்

Published on

தில்லியின் ரோகினியில் ரூ.5,000 கடனை திருப்பிச் செலுத்தாத ஒருவரை, 27 வயதுடைய இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்தததற்காக வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அக்டோபா் 5 ஆம் தேதி, ரோகினியில் உள்ள இந்திரா ஜே. ஜே. முகாமில் ரவி (22) என்ற நபா் கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 109 (1) (கொலை முயற்சி) இன் கீழ் தெற்கு ரோகிணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ரித்திக் என்ற சவன் அடையாளம் காணப்பட்டு பின்னா் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது ரூ.5,000 கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதால் அந்த நபரை கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டாா்.

கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், ஒரு கத்தி, அவரிடமிருந்து மீட்கப்பட்டது. சவான் ஒரு பழக்கமான குற்றவாளி என்றும், இதற்கு முன்பு ஆறு கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com