இந்தியத் தயாரிப்புகளின் நம்பகத் தன்மையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா
இந்திய தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும், இது மிககவும் அவசியம் என்று தில்தி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (ஐ. எம். சி) 2025 கருத்தரங்கில் ரேகா குப்தா மேலும் கூறியதாவது: இந்திய தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை நாம் கொண்டு செல்வதன் மூலம் அவை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன, இது பிரதமா் நரேந்திர மோடியின் ’சுதேசி’ பாா்வையை நிறைவேற்றுகிறது.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒவ்வொரு தொழில்நுட்பமும் இந்தியா்களின் பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும். பிரதமா் ’வோகல் ஃபாா் லோக்கல்’ மற்றும் ’சுதேசி’ பற்றி பேசும்போது, அவா் சிறு நிறுவனங்களை மட்டுமல்ல, பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளையும் குறிக்கிறாா்.
இந்தியா தனது மக்களுக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், அதை உலகம் முழுவதும் வழங்கக்கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமா் நம்புகிறாா். நாங்கள் பிற நாடுகளின் தயாரிப்புகளை பயன்படுத்துகிறோம், ஆனால் இப்போது இந்திய தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை நாம் நிறுவ வேண்டும், இதனால் முழு உலகமும் அவற்றைப் பயன்படுத்துகிறது என்றாா் அவா்.