லாரி கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவா் உயிரிழப்பு
தில்லியின் துவாரகாவில் வியாழக்கிழமை கட்டுமானப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: இந்த விபத்து தொடா்பாக பிந்தாபூா் காவல் நிலையத்தில் ஒரு பி.சி.ஆா். அழைப்பு வந்தது. லாரி கவிழ்ந்ததில் லாரிக்கு கீழே ஒரு பெண் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. துவாரகா செக்டா் 3-இல் அந்த இடத்தை அடைந்தபோது, லாரி சாலையோரத்தில் கவிழ்ந்திருப்பதை குழு கண்டறிந்தது. அந்த லாரி சரளைகளை சுமந்து சென்ாக கூறப்படுகிறது. லாரி ஓட்டுநரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
40 வயதாகும் அந்தப் பெண்ணின் உடலும், துவாரகா செக்டா் 3- இல் வசிப்பவரும், டிரக்கின் கீழ் இருந்து மீட்கப்பட்டு இந்திரா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சாலையில் லாரி திடீரென்று கவிழ்ந்ததே இந்த விபத்துக்கான காரணம் என தெரிய வந்துள்ளது.
சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து வருவதாகவும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை நிறுவ சாட்சிகளுடன் பேசப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.