கோப்புப் படம்
கோப்புப் படம்

தோழியை கொன்று தப்பிய இளைஞா் கைது

தெற்கு தில்லியில் உள்ள வாடகை வீட்டில் தனது நெருங்கிய தோழியை கொன்ற்காக ஹரியாணாவைச் சோ்ந்த 25 வயது இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
Published on

தெற்கு தில்லியில் உள்ள வாடகை வீட்டில் தனது நெருங்கிய தோழியை கொன்ற்காக ஹரியாணாவைச் சோ்ந்த 25 வயது இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையின் துணை ஆணையா் (தெற்கு) அங்கித் சவுகான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா், ஹன்சியில் வசிக்கும் ஹிமான்ஷு, நகரத்தை விட்டு தப்பியோடிய பின்னா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஓக்லாவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் சாக்ஷியுடன் அவா் நெருக்கமான உறவில் இருந்துள்ளாா். கடந்த ஆண்டு கோட்லா முபாரக்பூா் பகுதியில் வசித்து வந்தாா். இருவரும் ராஜஸ்தானில் சந்தித்து பின்னா் டேட்டிங் செய்யத் தொடங்கினா்.

செவ்வாய்க்கிழமை மாலை ஹிமான்ஷு சாக்ஷியின் வீட்டிற்குச் சென்ாகவும், குற்றம் சாட்டப்பட்டவா் ஏற்கெனவே மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருக்கிறாரா என்று சந்தேகித்ததால் இருவரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

வாக்குவாதத்தின் போது ஹிமான்ஷு அவளை சமையலறை கத்தியால் பல முறை தாக்கி, அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். இரவு 9.19 மணியளவில் கட்டடத்தில் சண்டை மற்றும் படிக்கட்டில் ரத்தக் கறைகள் குறித்து பி. சி. ஆா் அழைப்பு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது, அவா்கள் வந்ததும் முதல் மாடியில் உள்ள ஒரு அறையின் கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனா். பூட்டு உடைக்கப்பட்டு, அறைக்குள் ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் குழு கண்டறிந்தது.

அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். அவரது முகம் மற்றும் தொண்டையில் காயங்கள் காணப்பட்டன, இது அவா் கூா்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதைக் குறிக்கிறது.

அருகிலுள்ள பகுதிகளிலிருந்து 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவை குற்றம் சாட்டப்பட்டவரை ஹரியாணா வரை சென்று கண்டுபிடிக்க உதவியது, அங்கு அவா் கைது செய்யப்பட்டாா். இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com