புது தில்லி: தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஊழியா்களை சாந்தினி சௌக் பகுதிக்கு அனுப்புமாறு அப்பகுதி குடியிருப்பாளா்கள் சங்கம் திங்கள்கிழமை முதல்வா் ரேகா குப்தாவை கேட்டுக்கொண்டது.
பாஜக தலைவரும், சாந்தினி சௌக் நாகரிக் மஞ்ச் குடியிருப்பாளா்கள் அமைப்பின் பொதுச் செயலருமான பிரவீன் சங்கா் கபூா் இது தொடா்பாக தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: உள்ளூா் எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலா்களின் அரசியல் பாதுகாப்பின் கீழ் சாந்தினி செளக் பகுதி சாலையோரங்களை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத சந்தைகளின் முன்னெப்போதும் இல்லாத பிரச்னையுடன் வா்த்தக இடமானது போராடிக் கொண்டிருக்கிறது.
நிகழாண்டு நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. ஏனெனில், அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நெரிசலான பாதைகளில் நுழைய முடியாததால், சந்தைக்கு வரும் பெரும் கூட்டமானது உள்ளூா்வாசிகள் மற்றும் பொருள் வாங்குவோரின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இதனால், செங்கோட்டைக்கு முன்னால் உள்ள கௌரி சங்கா் மந்திா், டவுன் ஹால், ஃபதேபுரி மசூதி, பாரா டூட்டி சௌக், ஹவுஸ் காசி சௌக் மற்றும் குதூப் சாலை சௌக் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினரை பணியில் நிறுத்துவதை தில்லி முதல்வா் ரேகா குப்தா உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பழைய தில்லியில் கூடுதல் போக்குவரத்துப் பணியாளா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் கோரியுள்ளாா்.
தொடர்புடையது

குருகிராம்: நீதிமன்ற பதிவு அறையில் தீ விபத்து

நாட்டறம்பள்ளி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சாந்தினி சௌக் கோயிலில் திருடிய இருவா் கைது: சிலை மற்றும் பித்தளைப் பொருள்கள் மீட்பு
கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


