இளம் பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன் கைது
புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து சில மீட்டா் தொலைவில் உள்ள காதலனால் 20 வயது பெண் குத்திக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் நந்த் நாக்ரியில் வசிக்கும் துாய்மை பணியாளரான ஆகாஷ் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். நந்த் நக்ரியில் காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பல கத்திக்குத்து காயங்களுக்கு ஆளான அந்தப் பெண், ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
நந்த் நாக்ரி காவல் நிலையத்தில் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்தன, மேலும் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது . முதல்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரும் அண்டை வீட்டுக்காரரான பெண்ணும் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக உறவில் இருந்ததாகவும், ஆனால் அவா் அண்மையில் அவரிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கியதாகவும் தெரிகிறது.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.