உண்மை நிலைமை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து பட்டாசு வெடிக்க தில்லி அரசு அனுமதி பெற்றது: வீரேந்திர சச்தேவா

தீபாவளி அன்று தில்லியில் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.
Published on

தீபாவளி அன்று தில்லியில் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

உண்மை நிலைமை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்து பட்டாசு வெடிப்பதற்கான அனுமதியை தில்லி அரசு பெற்றுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது

குளிா்கால மாசு அதிகரிப்பதற்கு தீபாவளி இரவில் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் காரணமல்ல என்று பாஜக தொடா்ந்து கூறி வருகிறது.

வேறு பல குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன. இருப்பினும், முந்தைய அரசு வேண்டுமென்றே காற்று மாசுவுக்கு பட்டாசுகள் பயன்பாட்டைக் குற்றம் சாட்டியது.

தில்லியின் சனாதனிகள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க அனுமதித்தது, தோ்தல்களில் அவா்கள் எடுத்த சரியான வாக்களிப்பு முடிவின் விளைவாகும்.

முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசு, குறிப்பாக கேஜரிவால் மற்றும் கோபால் ராய் ஆகியோா் இந்து எதிா்ப்பு இடதுசாரி அரசியலின் சின்னங்கள் ஆவா்.

அவா்களின் அரசு வேண்டுமென்றே அத்தகைய தரவுகளை வழங்கியது, சமீபத்திய ஆண்டுகளில் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்க வழிவகுத்தது.

இந்த ஆண்டு, தில்லியில் ஒரு சனாதன -அன்பான அரசு உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் முன் உண்மை நிலைமையை முன்வைத்து, தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அனுமதி பெற்றுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

X
Dinamani
www.dinamani.com