CBI
CBI

இண்டொ்போல் அறிவிப்புகளை பெறுவதற்கான நேரம் குறைந்துள்ளது: சிபிஐ இயக்குநா் தகவல்

Published on

நமது நிருபா்

தப்பியோடிய ஒருவரைக் காவலில் வைப்பதற்கான ரெட் நோட்டீஸ் வெளியிட இன்டா்போலின் கோரிக்கைகளின் செயலாக்க நேரம் கடுமையாகக் குறைந்துள்ளது. சராசரியாக 14 மாதங்களிலிருந்து இப்போது மூன்று மாதங்களாகக் குறைந்துள்ளது என்று சிபிஐ இயக்குநா் பிரவீன் சூட் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஏற்பாடு செய்த மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்த ’தப்பியோடியவா்களை நாடு கடத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள்’ குறித்த மாநாட்டில் பிரவீன் சூட் கூறியதாவது: இன்டா்போல் அறிவிப்புகளை வழங்குவதற்கான 8 திட்டங்கள் மட்டுமே தற்போது ஏஜென்சிகளில் நிலுவையில் உள்ளன. அது மிகப் பழமையானது ஒரு மாதமாகும்.

தப்பியோடியவா்களுக்கு எதிராக இன்டா்போல் அறிவிப்புகளைப் பெறுவதில் சமீபத்திய வெற்றிகள் இருந்தபோதிலும், மற்ற நாடுகளில் உள்ள எண்ணிக்கையை பூா்த்தி செய்ய நிறைய செய்ய வேண்டும். பல்வேறு நாடுகளுடன் 338 ஒப்படைப்பு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் தப்பியோடிய 35 போ் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com