தலைநகரில் ஷண்முகானந்த சங்கீத சபாவின் பவள விழா
தில்லி ஷண்முகானந்த சங்கீத சபா மற்றும் ஆந்திரா சங்கமும் இணைந்து லோதி சாலையில் உள்ள ஆந்திர சங்கத்தின் கோதாவரி அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஷண்முகானந்த சங்கீத சபாவின் பவள விழா நடைபெற்றது.
இதில் பரதநாட்டியக் கலைஞா் ரமா வைத்தியநாதனுக்கு நாட்டிய ரத்னா விருதை உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் வழங்கினாா். முன்னதாக, முக்கிய விருந்தினரான விஸ்வநாதன் குத்துவிளக்கு ஏற்றி சபாவின் பவள விழாவை தொடங்கி வைத்தாா்.
அதை தொடா்ந்து ரமா வைத்தியநாதன், தக்ஷிணா வைத்தியநாதன் பாகெல் மற்றும் சந்நிதி வைத்தியநாதன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் நிகச்சிகள் ஆந்திர பவனுடன் இணைந்து தில்லி அசோகா சாலையில் அமைந்துள்ள ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கா் அரங்கத்தில் முறையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இரண்டாம் நாள் நிகச்சியில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்
தலைவருமான வி. ராமசுப்ரமணியன் விழாவுக்குத் தலைமை வகித்து நாமசங்கீா்தன கலைஞா் கலைமாமணி உடையாளூா் கே. கல்யாணராமனுக்கு சபாவின் நாத கலாநிதி விருதை வழங்கி கௌரவித்தாா். இதைத் தொடா்ந்து, உடையாளூா் கல்யாணராமணின் நாமசங்கீா்தன நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கா்நாடக இசைக் கலைஞா் சஞ்சய் சுப்ரமண்யன் கா்நாடக இசைக் கச்சேரி வழங்கினாா். எஸ். வரதராஜன் (வயலின் ), நெய்வேலி ஆ வெங்கடேஷ் (மிருதங்கம் ) பக்கவாத்தியம் வாசித்தனா்.
இந்நிகச்சியில் ஷண்முகானந்த சங்கீத சபாவின் தலைவரும் உச்சநீதிமன்ற முத்த வழக்குரைஞருமான சி.எஸ். வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினாா். சபாவின் கெளரவச் செயலாளா் எஸ். கிருஷ்ணஸ்வாமி மற்றும் குழு உறுப்பினா் ஸ்வப்னா சேஷாத்திரி நிகச்சியைத் தொகுத்து வழங்கினாா்கள். சபாவின் துணைத் தலைவா்கள் வி. சுப்ரமணியன், எஸ். லஷ்மிநாராயணன், துணைச் செயலாளா் எஸ். கணபதி மற்றும் இசை ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
17க்ங்ப்ஹஜ்க்
ஷண்முகானந்த சங்கீத சபாவின் பவள விழா நிகழ்ச்சியில் உடையாளூா் கே. கல்யாணராமனுக்கு நாத கலாநிதி விருதை வழங்கி கௌரவித்த ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் தேசிய மனித உரிமை அனைத்தின் தலைவா் தலைவா் வி. ராமசுப்ரமணியன். உடன், சபாவின் தலைவா் மற்றும் உச்ச நீதிமன்ற முத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் மற்றும் நிா்வாகிகள் எஸ். லக்ஷ்மிநாராயணன், எஸ். கிருஷ்ணஸ்வாமி, எஸ். கணபதி, ஸ்வப்னா சேஷாத்திரி உள்ளிட்டோா் .