தில்லியில் போலி பற்பசை தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: இருவா் கைது
வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்காவில் போலி பற்பசை தயாரித்ததாகக் கூறப்படும் ஒரு தொழிற்சாலையை கண்டுபிடித்து, இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஒரு ரகசியத் தகவலின் பேரில், வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டு, ஆசாத் மாா்க்கெட்டைச் சோ்ந்த முகிமுதீன் (33) மற்றும் பைசான் (37) ஆகியோா் சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டனா்.
சுமாா்18,300 நிரப்பப்பட்ட போலி பற்பசை குழாய்கள், 11,000 காலி பற்பசை குழாய்கள், 150 கிலோ பற்பசை, பேக்கேஜிங் பொருள்கள் மற்றும் ஒரு குழாய் நிரப்புதல் மற்றும் ஒரு சீல் செய்யும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்காக போலி பற்பசையை தயாரிக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தனா். அவா்கள் அந்த இடத்தை வாடகைக்கு எடுத்திருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.