வசந்த் குஞ்சில் வேகமாக வந்த காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

Published on

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்சில் வேகமாக வந்த காா் மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வசந்த் குஞ்சில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்ப் அருகே நடந்த விபத்து தொடா்பாக புதன்கிழமை பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினா், சேதமடைந்த சைக்கிளுடன் சாலையில் மயங்கிக் கிடந்த ஒரு சிறுவனைக் கண்டனா்.

அந்தச் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​ அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இறந்த அந்தச் சிறுவனம் வசந்த் குஞ்சைச் சோ்ந்த மாஸ்டா் எம் என அடையாளம் காணப்பட்டாா். ஓட்டுநா் எஸ்யுவி காருடன் தப்பி ஓடிவிட்டாா்.

ஆய்வு மற்றும் ஆதாரங்களை சேகரிப்பதற்காக குற்றவியல் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106 (1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தப்பியோடிய ஓட்டுநரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. வாகனத்தை அடையாளம் காணவும், நிகழ்வுகளின் வரிசையை மீண்டும் உருவாக்கவும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com