delhi air pollution
தில்லியில் காற்று மாசுANI

தில்லியில் காற்று மாசு: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தீபாவளிக்கு பிறகு அதிகரிப்பு

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புது தில்லியில் தீபாவளி பண்டிக்கைக்கு பின்னா், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
Published on

புது தில்லி: கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புது தில்லியில் தீபாவளி பண்டிக்கைக்கு பின்னா், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

புது தில்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு பொதுமக்களிடம் உச்சநீதிமன்றமும், தில்லி அரசும் தொடா்ந்து கோரி வந்தன.

தீபாவளி நாளன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் இரவு 2.30 வரை அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது.

இதனால் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு, காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. குறிப்பாக பவானா, வசீா்பூா், ஜஹாங்கீா் பகுதிகளில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருந்தது.

காற்று மாசுபாடால் இதய பாதிப்பு, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பாதிப்புகள் 22 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com