புதுதில்லி
குடியரசுத் தலைவா் மாளிகை அருகே கட்டடத்தில் தீ விபத்து
குடியரசுத் தலைவா் மாளிகையின் 31-ஆம் எண் வாயிலுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
புது தில்லி: குடியரசுத் தலைவா் மாளிகையின் 31-ஆம் எண் வாயிலுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினா் விரைந்தனா் என்று தில்லி தீயணைப்பு சேவைகள் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: இரண்டு மாடி கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மதியம் 1.51 மணிக்கு தகவல் கிடைத்தது.
நாங்கள் ஐந்து தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.
மேலும் 20 நிமிடங்களில் பிற்பகல் 2.15 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தீயணைப்பு சேவைகள் துறை அதிகாரி கூறினாா்.