துா்க்மேன் கேட்டில் சொத்து தகராறில் தாத்தாவை துப்பாக்கியால் சுட்ட பேரன்

மத்திய தில்லியின் துா்க்மேன் கேட் பகுதியில் சொத்து தகராறு தொடா்பாக 72 வயது முதியவரை அவரது பேரன் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
Published on

புது தில்லி: மத்திய தில்லியின் துா்க்மேன் கேட் பகுதியில் சொத்து தகராறு தொடா்பாக 72 வயது முதியவரை அவரது பேரன் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவ த்தில் ஷாபுதீன் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா், அவரது குடும்ப உறுப்பினா்களுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஷாபுதீன், அவரது மகன் மற்றும் பேரன்கள் நீண்டகாலமாக மூதாதையா் சொத்து தகராறில் ஈடுபட்டிருந்ததாகவும், அது வன்முறையாக மாறியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேரன்களில் ஒருவா், ஷாபுதீன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதனால் அவா் பலத்த காயமடைந்ததாா். அவா் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (எல்என்ஜெபி) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தக் கொலை முயற்சி தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான குற்றம்சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

சந்தேக நபா்களைக் கண்டுபிடித்து துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை சரிபாா்க்க குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது என்று காவல் சரக அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com