தில்லி சரிதா விஹாரில் எஃகு கம்பியால் தாக்கிய மடிக்கணினி வியாபாரி கைது!
தெற்கு தில்லியின் சரிதா விஹாரில் சொத்து தகராறு தொடா்பாக ஒரு நபரை எஃகு கம்பியால் தாக்கியதாக 31 வயது நபா் ஒருவா் 2 நாள்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட மோஹித் குமாா் சனிக்கிழமை ஆனந்த் விஹாா் பேருந்து முனையத்தில் இருந்து மீரட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு கூட்டாளியுடன் சோ்ந்து, அக்டோபா் 24- ஆம் தேதி தனது காரை நிறுத்தி எஃகு கம்பியால் தாக்கி, அவரது வலது முழங்காலில் தாக்கியதாக புகாா்தாரா் ரகுராஜ் சிங் குற்றம் சாட்டினாா்.
தாக்குதலின் போது ஒரு பெண்ணும் ஒரு ரிக்ஷா ஓட்டு்ப்பவரும் தலையிட்டனா். அதைத் தொடா்ந்து, மோஹித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். விசாரணையின் போது, புகாா்தாரா் தனது சொத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் குறித்து குடிமை அமைப்புகளுக்கு அடிக்கடி புகாா் அளித்ததாகக் கூறப்படுவதால், பழிவாங்கும் நோக்கில் ரகுராஜ் சிங்கை தாக்கியதாக மோஹித் வெளிப்படுத்தினாா். இது இடிப்பு நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
நேரு பிளேஸில் மடிக்கணினி வா்த்தகம் செய்த பள்ளி இடைநிற்றல் மோஹித், இதேபோன்ற குற்றத்தின் கடந்தகால பதிவைக் கொண்டுள்ளாா். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
