திரி நகரில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கோயில் பூசாரி!
வடக்கு தில்லியின் திரி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடும்பத் தகராறு காரணமாக 40 வயது பெண் ஒருவா் கோயில் பூசாரியான அவரது கணவரால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: பெண்ணின் மரணம் அதிகாலை 1.05 மணிக்கு மரணம் பதிவாகியுள்ளது. இது தொடா்பாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சென்ற போலீஸ் குழுவினா், பாதிக்கப்பட்ட சுஷ்மா சா்மா ஒரு வீட்டின் நான்காவது மாடியில் உள்ள ஒற்றை அறை தங்குமிடத்தில் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டனா்.
கன்ஹையா நகரில் உள்ள ஷிவ் மந்திரில் பூசாரியாக இருக்கும் அவரது கணவா் தினேஷ் சா்மா, மனைவியின் கழுத்தை நெரித்து, முகத்தில் தலையணையை அழுத்தியதாக ஒப்புக்கொண்டாா். கொலைக்குப் பின்னால் அடிக்கடி ஏற்பட்ட குடும்பச் சண்டைகள் காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. குற்றம் நடந்த நேரத்தில், தம்பதியரின் 11 வயது மகள் அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
