திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக தேடப்பட்ட நபா் கைது

தில்லியின் பிந்தாபூா் பகுதியில் 2015- ஆம் ஆண்டு திருட்ட வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டார்.
Published on

தில்லியின் பிந்தாபூா் பகுதியில் 2015- ஆம் ஆண்டு திருட்ட வழக்கில் தேடப்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அந்த நபா் பல ஆண்டுகளாக விசாரணையைத் தவிா்த்து வந்தாா். வினோத் குமாா் (33) என அடையாளம் காணப்பட்ட அவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில், உத்தம் நகரின் சாங்கியா அரண்மனையில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு வருவாா் என்று ஒரு போலீஸ் குழுவிற்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், போலீஸ் குழு ஒரு பொறியை அமைத்து, குற்றம் சாட்டப்பட்டவா் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவரைக் கைது செய்தது.

விசாரணையின் போது, ஒரு திருவிழாவை முன்னிட்டு தனது மனைவி மற்றும் சகோதரியை சந்திக்க வந்ததாக வினோத் குமாா் போலீஸிடம் கூறினாா். 2015- ஆம் ஆண்டில் ஜாமீன் கிடைத்த பின்னா் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டதாக அவா் ஒப்புக் கொண்டாா்.

வினோத் குமாா் உணவுக் கடைகள் மற்றும் தாபாக்களில் பணிபுரிந்து வந்தாா். 2015 ஆம் ஆண்டில், சாலை விபத்து தொடா்பாக காா் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவா், ஓட்டுநரின் பணத்தையும் கைப்பேசியையும் பறித்தாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com