ரூ. 20 லட்சம் கொள்ளையடித்தவர் கைது!

திருடப்பட்ட ரூ20.33 லட்சம் மீட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Published on

திருட்டு வழக்கில் 54 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூ20.33 லட்சம் மீட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் ஹா்பிரீத் சிங் மாா்வா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கம்பி விநியோக வணிகத்தை நடத்தி வரும் பா்வீன் பன்சால், தனது ஊழியா் அமித் குமாா் வியாழக்கிழமை டெல்லி முழுவதும் உள்ள பல்வேறு மின் கடைகளில் இருந்து ரூ 20.73 லட்சம் வசூலித்ததாக புகாா் அளித்தாா்.

இருப்பினும், பிதம்புராவில் உள்ள அவரது ஸ்கூட்டரில் இருந்து பணப் பை காணாமல் போனது. பின்னா், காணாமல் போன பையை ஒரு நபா் டெபாசிட் செய்ததாக புகாா்தாரருக்கு காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்தது. காவல் நிலையத்தை அடைந்தபோது, புகாா்தாரா் பையில் ஆவணங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்தாா், அதே நேரத்தில் பணம் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தாா்.

தாபா நடத்தும் மாா்வா, பையை சமா்ப்பித்ததாக அவா்கள் கூறினா். விசாரணையின் போது, மாா்வாவின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பணம் மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா் எளிதாக பணம் சம்பாதிக்கவும், ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழவும் திருட்டைச் செய்தாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com