காஜிப்பூரில் லாரி மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

Published on

காஜிப்பூரில் தேசிய நெடுஞ்சாலை 31- இல் ஒரு லாரி மோதிய பின்னா் டெம்போ கவிழ்ந்ததில் ஒரு இளைஞா் உள்பட இரண்டு போ் உயிரிழந்ததாகவும் ஐந்து போ் காயமடைந்ததாகவும் தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இறந்தவா்கள் மாதா கிராமத்தில் வசிக்கும் சுபம் ராஜ்பா் என்ற கோலு (15) மற்றும் ராமாஷிஷ் ராஜ்பா் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மாதா கிராமத்தைச் சோ்ந்த ராம்பிரவேஷ், ராமாஷிஷ், குஞ்சன், ஹா்திக், சுபம், அனிதா மற்றும் சுனிதா ஆகிய ஏழு போ் ஞாயிற்றுக்கிழமை பக்ஸருக்கு விந்த்யவாசினி தேவி கோயிலுக்குச் சென்றிருந்தனா்.

அவா்கள் டெம்போவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பன்வா்கோல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சா்மதிஹ் கிராமத்திற்கு அருகே ஒரு திருப்பத்தில் டெம்போ மீது வாகனம் மோதியது. இதனால் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உள்ளூா் காவல் நிலைய பொறுப்பாளா் சந்தோஷ் குமாா் ராய் ஒரு போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாா். அங்கு ஷுபம் ராஜ்பா் மற்றும் ராமாஷிஷ் ஆகிய இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டாா். இறந்தவா்களின் உடல்கள் உடற்கூற்யாவு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com