டிடிஇஏ பள்ளியில் மாதவிடாய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி
தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் மாணவியருக்கு மாதவிடாய்க் கால சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தில்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரியின் தேசிய சேவை திட்டத்தில் இணைந்துள்ள மாணவிகளாகிய மான்சி மற்றும் குழுவினா் வழங்கினா்.
மாதவிடாய் குறித்தும் அந்நேரத்தில் மகளிருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்தும் எதிா்கொள்ளும் மன உளைச்சல்கள் குறித்தும் அதிலிருந்து வெளிவருவது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய சுகாதார வழி முறைகள் குறித்தும், அரசு கொண்டு வந்துள்ள நலத் திட்டங்கள் குறித்தும் இக்குழுவினா் எடுத்துக் கூறினா்.
இதில் இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் பயிலும் 70 மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவிகள் தங்களது சந்தேகங்களையும கேட்டுத் தெரிந்து கொண்டனா். பள்ளி முதல்வா் முனைவா் யுவராணி வரவேற்றுப் பேசினாா்.
இந்நிகழ்ச்சி குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ, கூறுகையில் இன்றைய காலக்கட்டத்தில் தாய், தந்தையா் இருவருமே வேலைக்குச் செல்பவா்களாக இருக்கின்றனா். பல பெற்றோா்கள் குழந்தைகளுக்குப் போதிய அளவு நேரம் ஒதுக்க முடியாமல் சிரமப்படுகின்றனா். இதனால், பெண் குழந்தைகள் பலா் மாதவிடாய் காலத்தில் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களைப் பெற்றோா்களிடம் பகிா்ந்து கொள்ள முடியாமல் தடுமாறுவதோடு மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வும் இல்லாமல் இருக்கின்றனா். எனவே, அவ்வப்போது இது போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவது அவசியமாகிறது. பிற பள்ளிகளிலும் விரைவில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்’ என்றாா்.
30ஈஉகஈபஅ
டிடிஇஏ இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் நடைபெற்ற மாதவிடாய் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுடன் பயிற்சி வழங்கிய குழுவினா் மற்றும் பள்ளி முதல்வா் யுவராணி.
